செர்பிய ஓபன் டென்னிஸ் போட்டி - அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

செர்பிய ஒபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
செர்பிய ஓபன் டென்னிஸ் போட்டி - அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
செர்பிய ஒபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். செர்பியா தலைநகரான பெல்கிரேட்டில் நடந்த அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட ரஷ்ய வீரர் அஸ்லான் கரத்சேவ், 7க்கு 5, 4க்கு 6, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.  முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சிடம் தனது வெற்றி வாய்ப்பை கரத்சேவ் பறி கொடுத்திருந்தார். தற்போது அதனை ஈடு செய்யும் விதமாக  ஜோகோவிச்சை வீழ்த்தி கரத்சேவ் செர்பிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்