21 வயதே நிரம்பிய தங்க மங்கை - சாதித்துக் காட்டிய ஹிமா தாஸ்

அசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...
21 வயதே நிரம்பிய தங்க மங்கை - சாதித்துக் காட்டிய ஹிமா தாஸ்
x
அசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்...தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" என்ற பாரதியின் கனவை நனவாக்கியுள்ளார் 21 வயதே நிரம்பிய இந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸ். அசாமில் உள்ள நாகான் நகரில் பிறந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ், இந்திய கால்பந்து அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவோடு தன் சிறு வயதைக் கழித்தார்...

ஆனால் காலமோ அவரை கால்பந்திலிருந்து தடகளத்திற்கு மாற்றியது. விளைவு...20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நாட்டிற்கு வழங்கினார். சர்வதேச தடகள போட்டிகளில், 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் இவர் வென்ற தங்கப்பதக்கங்கள் ஐந்து. தற்போது, டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்