இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி - இந்தியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 337 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.
இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி - இந்தியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்
x
 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில், ரிஷப் பண்ட் 91 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் அடித்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி, சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது

300 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா- 
300 விக்கெட் வீழ்த்திய 6வது இந்திய வீரரானார்
டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் லாரன்ஸை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை இஷாந்த் படைத்தார். இவருக்கு முன்னதாக அணில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன், அஸ்வின், ஜாஹிர் கான் ஆகியோர் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். தற்போது 6வது வீரராக அந்த பட்டியலில் இஷாந்த் இணைந்துள்ளார்.  

இந்தியா Vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் - 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி ;சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, தொடங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்று தீர்ந்தது. சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட் விற்பனைக்கான கட்டணம் 100 முதல் 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,  தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன...


Next Story

மேலும் செய்திகள்