முஷ்டாக் அலி கோப்பை - தமிழக அணி 2வது முறை சாம்பியன் பட்டம்

சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி, 2-வது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முஷ்டாக் அலி கோப்பை - தமிழக அணி 2வது முறை சாம்பியன் பட்டம்
x
சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி, 2-வது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில், 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத்தின் பரோடா அணியும், தமிழக அணியும்  பலப்பரீட்சை நடத்தின. 38 அணிகள் மோதிய போட்டியில், நாக் அவுட் முறையில் பல அணிகள் வெளியேறின. 
இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியும், தேவ்தார் தலைமையிலான பரோடாவும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி, 20 ஓவரில்120 ரன்களை குவித்து இலக்காக நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழக அணி,18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து வாகை சூடி, 2ஆம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. சிறப்பாக பந்து வீசிய தமிழக அணியின் மணிமாறன் சித்தார்த், ஆட்ட நாயகன் விருதுபெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்