சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்றது.
சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்தி அசத்தல்
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்றது.பிரிஸ்பேனில் நடந்த போட்டியில்  328 ரன்கள் என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை இந்தியா ஆடியது. போட்டியின் கடைசி நாளான இன்று, தொடக்க வீரர் சுப்மான் கில், அபாரமாக ஆடி, வலுவான அடித்தளம் அமைத்தார். 91 ரன்களுக்கு அவர் ஆட்டம் இழந்த நிலையில், நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து புஜாராவும் பெவிலியன் திரும்பிய நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி  97வது ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி பெற்றது.89 ரன்கள் அடித்த பண்ட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றிமூலம், டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது. மேலும், தொடர்ச்சியாக 3 முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி சாதனையும் படைத்து உள்ளது. ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் அதை வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாறு படைத்து கோப்பை வென்றள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மிகச் சிறந்த தருணம் என்றும், திறமையை வெளிப்படுத்தி, இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இருப்பதால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். தொடர் முழுவதும் இந்திய வீரர்களிடம் ஆற்றலும், ஆர்வமும் தென்பட்டதாகவும், எதிர்கால போட்டிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மோடி கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தப் போட்டியின், ஒவ்வொரு செசன் முடிவிலும், புதிய நாயகர்கள் தோன்றியதாகவும், காயங்களும், அசாதார சூழலும், வீரர்களின் நம்பிக்கையால் தகர்த்தெறியப்பட்டதாகவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்