"முறையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்" : இனவெறித்தாக்குதல் - ஐ.சி.சி கடும் கண்டனம்

இனவெறித்தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியாமான ஐ.சி.சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
முறையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் : இனவெறித்தாக்குதல் - ஐ.சி.சி கடும் கண்டனம்
x
 ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் இருந்து முறையான நடவடிக்கை எடுத்த அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி, கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி தாக்குதல்
டுவிட்டரில் கொதிக்கும் இந்திய ரசிகர்கள்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வீர‌ர்கள் புகார் அளித்த‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரசிசம் என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து இந்தியா முழுவதும் இந்த விவகாரத்தை கவனம் பெற செய்து வருகின்றனர். . 

ரவுடித்தனம் - விராட் கோலி விமர்சனம்
கடுமையான நடவடிக்கை தேவை - விராட்
ரவுடித்தனத்தின் உச்சமே இந்த இனவெறித்தாக்குதல் என ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். டுவிட்டரில் கருத்து பதிவிட்ட விராட், உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுதியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, நாங்கள் விராட் கோலி ரசிகர்கள் அல்ல, ஆனால், இந்த சூழலில் விராட் கோலியின் ஆக்ரோஷ பதிலடி தேவை என இந்திய ரசிகர்கள் சிலர் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்


"முன்பும் சிட்னியில் இனவெறித் தாக்குதல்"
"இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்"-இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் வலியுறுத்தல்
இனவெறி தாக்குதல் தொடர்பாக பேட்டியளித்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், இதற்கு முன்பும் சிட்னி மைதானத்தில் இனவெறி தாக்குதலை சந்தித்துள்ளதாக  தெரிவித்தார். மீண்டும் இனவெறி தாக்குதல் என்பதை ஏற்க முடியாது என ஆவேசமாக பேசியுள்ள அஸ்வின், இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் , ஐசிசிக்கும் கோரிக்கை விடுத்தார். 




Next Story

மேலும் செய்திகள்