3-வது டெஸ்டிலும் இந்தியாவின் வெற்றி வேட்கை தொடருமா? - இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு/
பதிவு : டிசம்பர் 31, 2020, 01:30 PM
சிட்னியில் தொடங்கும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய, ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் இரு போட்டிகளில் பிரதான வீரர்கள் இடம் பெறாத நிலையில் 3-வது டெஸ்டில் வார்னர், வில்  புகோவ்ஸ்கி, ரோகித் சர்மா ஆகியோரின் வருகை கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறிய ஜோ பர்னஸ் அதிரடியாக கழற்றி விடப்பட்டு உள்ளார். அதேநேரம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து உள்ள தொடக்க வீரர் டேவிட் டேவிட் வார்னர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அதேபோல் பயிற்சி ஆட்டத்தின் போது ஹெல்மட்டில் பந்து பட்டு காயமடைந்த மற்றொரு இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.  

இந்திய அணியில் தனிமைப்படுத்துதல் படலத்தை முடித்து உள்ள அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. பார்ம் அவுட் காரணமாக மயங்க் அகர்வால், ஹனுமா விகாரி மற்றும் காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ரோகித், கே.எல். ராகுல், நடராஜன் சேர்க்கப்படலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சூசகமாக தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

சிலை போல நின்ற கிரிக்கெட் வீர‌ர்கள் - தமிழக கிரிக்கெட் வீர‌ர்களின் குறும்புத்தனம்

சிலை போல நின்ற கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீர‌ர்கள் உடற்பயிற்சி செய்த போது statue கேம் விளையாடியதை முருகன் அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

32 views

புஜாராவை புகழ்ந்த தினேஷ் கார்த்திக் - வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை புகழ்ந்து தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

64 views

மச்சா, நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப்பண்ட்

வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

6347 views

சென்னை வந்தடைந்த இங்கிலாந்து அணி

சென்னையில் வருகிற பிப்ரவரி 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

45 views

14 வது ஐ.பி.எல். வீர‌ர்களுக்கான 'மினி' ஏலம் - சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டம்

14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

22 views

சென்னை அணியில் நீடிக்கிறார் ரெய்னா

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீர‌ர்களை விடுவித்துள்ளது.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.