பெண்களுக்கான சவுதி அரேபிய கோல்ப் தொடர் - தொடக்க லீக்கில் டென்மார்க் வீராங்கனை வெற்றி
பதிவு : நவம்பர் 16, 2020, 11:26 AM
சவுதி அரேபியாவில் நடந்த பெண்களுக்கான கோல்ப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை எமிலி வெற்றி பெற்றார்.
முதல் முறையாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தொழில் முறை கோல்ப் தொடர் நடத்தப்படுகிறது. இதையடுத்து நடந்த தொடக்க சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை எமிலி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இங்கிலாந்து வீராங்கனை ஹாலை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார். 

துருக்கி கிராண்ட் பிரி பார்முலா 1 கார் பந்தயம்
முன்னணி வீரர் ஹாமில்டன் வெற்றி - 7-வது முறையாக பட்டம் வென்று சாதனை
துருக்கி கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முன்னணி வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கிராண்ட் பிரி தொடரான துருக்கி பார்முலா ஒன் கார் பந்தய போட்டி துருக்கியின் துஸ்லா நகரில் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் முடிவில் பார்முலா ஒன் ஜாம்பவான் ஹாமில்டன் வெற்றி பெற்று 7-வது கிராண்ட் பிரி பட்டத்தை உச்சி முகர்ந்தார். இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜெர்மனி வீரர் மைக்கெல்லின் சாதனையை ஹாமில்டன் சமன் செய்தார்.   
ஸ்பெயின் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தயம் - ஜப்பான் வீரர் உலக சாம்பியன் பட்டம் வென்றார்
ஸ்பெயின் கிராண்ட் ப்ரீ மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஸ்பெயின் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தய தொடர் ஸ்பெயினின் வெலன்சியா நகரில் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ஜப்பானிய வீரர் ஜோன் மிர் வெற்றி பெற்று தனது கன்னி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றார். மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார்.    
ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் முதல் லீக்கில் திம் போராடி வெற்றி
டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னாள் சாம்பியன்கள் டொமினிக் திம் மற்றும் ஸ்டேபானஸ் சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 7-க்கு 6, 4-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் டொமினிக் திம் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

379 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

323 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

236 views

பிற செய்திகள்

" டிசம்பரில் கொரோனா புது உச்சம் தொடும்" -அமெரிக்க மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை

அடுத்த மாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்று புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் எச்சரித்து உள்ளார்.

38 views

தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் - அதிபர் டிரம்ப் ஆவேச பேச்சு

குறைந்தது 6 மாத காலமாவது தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்ட போராட்டம் நடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

74 views

பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி - மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

இலங்கையிலுள்ள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

கிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகைக்கு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

496 views

"கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை" - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்

39 views

அமெரிக்க தேர்தல் - பைடனின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவாக, ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.