பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - முதல் சுற்றில் நடால் வெற்றி

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - முதல் சுற்றில் நடால் வெற்றி
x
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார். பிரான்சில் நடைபெற்ற இந்த போட்டியில், நடால், சக ஸ்பெயின் வீரர் லோபசை எதிர்கொண்டார். இதில், அபாரமாக ஆடிய நடால், 4-க்கு 6, 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று தனது ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்தார். இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - ஷெரெவ் 2-வது சுற்றுக்கு தகுதி 

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள  அலெக்சாண்டர் வெரெவ், செர்பிய வீரர் மியாமிர் கெச்வினோவிக்கை சந்தித்தார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய வெரெவ்,  இறுதியில் 6-க்கு 2, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.         



Next Story

மேலும் செய்திகள்