பெங்களூருவை வீழ்த்தியது சென்னை - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் இளம் வீர‌ர்கள் தங்கள் ஸ்பார்க்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெங்களூருவை வீழ்த்தியது சென்னை - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
x
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி அரைசத‌மும், டி வில்லியர்ஸ் 39 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி வீர‌ர் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 20 ஓவர் முடிவில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. 
தொடர்ந்து விளையாடிய சென்னை அணியில், தொடக்க ஆட்டக்கார‌ர் கெய்க்வாட் அரைசதம் கடந்தார். இதனால், சென்னை அணி, 18 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தோனி விரும்பியது போல, சாம் கரண், கெய்க் வாட் என இரு இளம் வீர‌ர்கள் தங்கள் ஸ்பார்க்கை வெளிப்படுத்தியுள்ளனர். 

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐ.பி.எல் 45 வது லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
முதலில் ராஜஸ்தானை எதிர்கொண்ட மும்பை அணி, 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த‌து. கடைசி நேரத்தில் 21 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா 7 சிக்சர்களுடன்  60 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்த‌து. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 107 ரன் குவித்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
-


Next Story

மேலும் செய்திகள்