சென்னையை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி - புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சி.எஸ்.கே.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 வது லீட் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
சென்னையை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி - புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சி.எஸ்.கே.
x
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 வது லீட் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்த‌து சென்னை அணி. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்களும் சாம் கர்ரன் 22 ரன்களும் எடுத்தனர். 126 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி, 15 பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதுவரை 10 லீக் போட்டிகளில் ஆடிய சென்னை அணி 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்