ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே போட்டியில் 2 வது சூப்பர் ஓவர் நடந்துள்ளது. அதில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்
x
முதலில் களமிறங்கிய மும்பை அணி டி காக் மற்றும் பொல்லார்டு ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் ராகுல் தனி ஒருவராக 77 ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தினார். இறுதியாக வந்த தீபக் ஹூடா சிறப்பாக ஆடி ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

பவுலர்களின் ஜாலம் - முதல் சூப்பர் ஓவர் சமன்

சூப்பர் ஓவரில் மும்பை அணியின் பும்ரா வெறும் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக பந்து வீசிய முஹம்மது ஷமி, அதே 5 ரன்களில் மும்பை அணியை சுருட்டி மீண்டும் போட்டியை சமனில் முடித்தார்.

2-வது சூப்பர் ஓவர்- சிக்ஸ் அடித்து கெய்ல் அதிரடி

இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 வது சூப்பர் ஓவர் நடந்தது. அதில் பஞ்சாப் அணிக்காக பந்து வீசிய கிறிஸ் ஜோர்டன், 11 ரன்கள் விட்டு கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், கெயில் முதல்  பந்தில் சிக்ஸர் விளாச,  மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரி அடித்து  ஒரு வழியாக ஆட்டத்தை முடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி மும்பையை போராடி வீழ்த்தியது.

கொல்கத்தாவிடம் வீழ்ந்த‌து ஐதராபாத்

இதேபோல், மற்றொரு ஐ.பி.எல் 35 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை எதிர்கொண்ட கொல்கத்தா, சூப்பர் ஓவரில் மிரட்டலான வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி, சிறப்பாகவே பந்துவீசியது. குறிப்பாக தமிழக வீர‌ர்களான நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தாவின் ரன் ரேட்டை சிறப்பாக கட்டுப்படுத்திய விஜய்சங்கர், ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்த‌து. அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியை, கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் பர்கூசன் நிலைகுலைய செய்தார். 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருந்தபோதும் இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், பொறுப்பாக விளையாடிய ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் ஆட்டத்தை சமனில் முடித்தார். 

கொல்கத்தாவிடம் வீழ்ந்த‌து ஐதராபாத்

இதைதொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில், முதல் மூன்று பந்துகளிலே வார்னர் மற்றும் அகமது ஆகியோரை, போல்ட் ஆக்கி மிரட்டலை தொடர்ந்தார் பர்கூசன். இதனால் 3 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டி, கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் ஃபர்கூசன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக களமிறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்