கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர் - 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர் - 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
x
சார்ஜா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து விட்டுச் சென்றனர். குறிப்பாக டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து பெங்களூர் அணி 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க உதவினார். தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சுப்மன் கில் மட்டும் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வே 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. பெங்களூரு அணியின் கிறிஸ் மோரிஸ் மற்றும் தமிழக வீரர்  வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்