ராஜஸ்தான் Vs ஐதராபாத் அணிகள் மோதல் - இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
ராஜஸ்தான் Vs ஐதராபாத் அணிகள் மோதல் - இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்
x
துபாயில் நடந்த 26வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர் 48 ரன்கள் மற்றும் மனீஷ் பாண்டே 54 ரன்கள் என பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த‌தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்த‌து. ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசினார். 

இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

இதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், இளம் வீர‌ர்கள் பராக் மற்றும் டிவேட்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. 30 பந்துகளுக்கு 62 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்திருந்த‌து ராஜஸ்தான்.அப்போது கைகோர்த்த பராக் மற்றும் டிவேட்டியா இருவரும், 85 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து போட்டியின் போக்கை மாற்றினர். இதனால், கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. 

5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை

அபுதாபியில் நடந்த ஐபிஎல் 27 வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்களும், ஷ்ரேயாஸ் 42 ரன்களும் எடுத்த‌னர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்த‌து. மும்பை அணியின் க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில், டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் அந்த அணி, 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதி ஓவரில்  இலக்கை எட்டியது.

27வது போட்டி - பெங்களூரு vs கொல்கத்தா

ஐபிஎல் 27 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. சார்ஜா மைதானத்தில்  இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி மூன்றாவது இடத்திலும் பெங்களூரு அணி நான்காவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் சிறப்பான வெற்றி பெறும் அணி முதல் இடத்தை கைப்பற்ற கூட வாய்ப்பு இருப்பதால், இரு அணிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் - வென்றார், நடால்

பிரன்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் நடால் வெற்றி பெற்றுள்ளார். உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீர‌ரான ஜோகோவிச்சை எதிர்கொண்ட நடால், 6க்கு பூஜ்ஜியம், , 6க்கு 2, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வென்றுள்ளார். இந்த வெற்றி மூலம், 13 வது முறையாக பிரன்ச் ஓபன் பட்ட‌மும், 20 வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டமும் பெற்றுள்ளார் நடால்.. 

எய்பில் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் - ஹாமில்டன் புதிய சாதனை  

ஜெர்மனியில் நடந்த எய்பில் (EIFEL) கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரபல வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இது ஹாமில்டன் வென்ற 91-வது பார்முலா 1 கார்பந்தய பட்டமாகும். ஜெர்மனி கார் ரேஸ் ஜாம்பவான் மைக்கெல், 91 முறை பார்முலா 1 கார்பந்தய பட்டங்களை வென்று சாதனை படைத்து இருந்தார். தற்போது அந்த சாதனையை  ஹாமில்டன் சமன் செய்துள்ளார். 

கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - போர்ச்சுகல் வீரர் ரூபன் அபார வெற்றி

பிரபல பிரஞ்சு கிராண்ட்பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரில் இத்தாலி வீரர் வெற்றி பெற்றார். பரபரப்பாக நடந்த பிரஞ்சு கிராண்ட்பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரின் இறுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் டேனிலோ பெட்ரூசி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.  

கிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - போர்ச்சுகல் வீரர் ரூபன் அபார வெற்றி

பிரபல கிரோ டி இத்தாலி டூர் சைக்கிள் பந்தய தொடரின் 9-வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். பரபரப்பாக நடந்த 9-வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர் ரூபன் 208 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 31 ஆண்டுகள் கழித்து பட்டம் வென்ற முதல் போர்ச்சுகல் வீரர் என்ற பெருமையை ரூபன் தட்டி சென்றார். 
 




Next Story

மேலும் செய்திகள்