ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - பஞ்சாபை வீழ்த்தியது சென்னை சிஎஸ்கே அணி
பதிவு : அக்டோபர் 05, 2020, 08:29 AM
விக்கெட் இழப்பின்றி பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டி உள்ளது.
விக்கெட் இழப்பின்றி பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டி உள்ளது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் மற்றும் டு பிளேசிஸ் விக்கெட் இழக்காமல் சென்னை அணியை வெற்றிபெறச் செய்தனர். டுபிளேசிஸ் 87 ரன்களும், வாட்சன் 83 ரன்களும் குவித்தனர். இருவரும் தலா 53 பந்துகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு - இறுதி நிமிடத்தில் பாண்டியா அதிரடி

சார்ஜாவில் ஐ.பி.எல், 17 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை எதிர்கொண்ட மும்பை அணி, 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை  அணியில், அதிகபட்சமாக டி காக் 67 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் பொல்லார்டு மற்றும் பாண்டியா பிரதர்ஸ் அதிரடி காட்ட  20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 208 ரன்கள் குவித்த‌து.

34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்கம் சிறப்பாகவே அமைந்த‌து. பொறுப்பாக ஆடிய வார்னர் 60 ரன்கள் எடுத்தார். ஆனால் இதை தொடர்ந்து வந்த வீர‌ர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த‌தால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
 


தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

211 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

76 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30 views

பிற செய்திகள்

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - யுகோ ஹம்பர்ட் கோப்பையை வென்றார்

பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

7 views

பெங்களூருவை வீழ்த்தியது சென்னை - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் இளம் வீர‌ர்கள் தங்கள் ஸ்பார்க்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

300 views

"அதிக ரன் குவித்த 2 இந்திய கேப்டன்கள்" - ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ

பெங்களூரு அணியுடனான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனியும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும் உரையாடிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

3079 views

குழந்தைகள் போல கண்ணாடி - சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்

சுட்டிக்குழந்தை என சென்னை அணி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் c அதனை நிரூபித்துள்ளார்.

6620 views

200 சிக்சர்களை கடந்தார் விராட் கோலி

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர் அடித்த 3 வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.