ஐ.பி.எல். தொடர்- டெல்லி அணி அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடர்- டெல்லி அணி அபார வெற்றி
x
சார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அட்டகாசமாக ஆடி 88 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


Next Story

மேலும் செய்திகள்