சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்ன?

சென்னை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் வரும் ஆட்டங்களில் என்ன மாற்றங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்
சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்ன?
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு , ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ராஜஸ்தான், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து புள்ளி பட்டியலில் ,  சறுக்கி உள்ளது..

கடந்த 3 போட்டிகளிலும் தொடக்க வீரர்களான வாட்சன் , விஜய் சொதப்பலான ஆட்டத்தால் , மிடில் வரிசை வீரர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுகிறது..முரளி விஜய் 3 போட்டிகளில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.மற்றொரு வீரர் வாட்சன் 51 ரன்கள் எடுத்துள்ளார், முதல் 6 ஓவர்களில் நன்றாக அடித்து ஆடி , சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய இரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதால் , அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறது... இதனால் கேப்டன் தோனி தொடக்க வீரர்களில் ஒருவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அம்பத்தி ராயுடு காயம் காரணமாக விளையாடாத நிலையில் , பாப் டூ பிளெஸிஸ் மட்டும் தனி ஒருவராக போராடிக் கொண்டு இருக்கிறார். அவர் 3 இன்னிங்ஸில் 173 ரன்கள குவித்துள்ளார். புது வீரரான ரிதுராஜ் கேக்வாத் 2 போட்டிகளில் 5 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாதது மேலும் அணிக்கு பின்னடைவாகும்.. ஜாதவ் 3 போட்டிகளில் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்..

மறபுறம் சுழற்பந்துவீச்சில் ஜடேஜா , பியுஷ் சாவ்லா ஆகியோர் ரன்களை வாரி வழங்குகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்தால் மட்டுமே சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்ப முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்..

சென்னை அணி வரும் 2ஆம் தேதி , தனது 4வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது, அடுத்த போட்டிக்கு 5-6 நாட்கள் இடைவெளி இருப்பதால் அணியில் தேவையான மாற்றங்களை செய்து , புத்துணர்வுடன் களமிறங்கி வெற்றி பெற தேவையான அனைத்தையும் செய்வோம் என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...   



Next Story

மேலும் செய்திகள்