கோலி தலைமையிலான பெங்களூரு அணி படுதோல்வி - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான மோதலில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கோலி தலைமையிலான பெங்களூரு அணி படுதோல்வி - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
x
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளில்132 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகள் , 7 சிக்ஸர்கள் அடங்கும்...

இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். படிக்கல் 1 ரன்னிலும் , கோலி 1 ரன்னிலும் , ஜோஷ்வா பூஜ்ஜியம் ரன்னிலும் ஆவுட் ஆகினர், பேட்ஸ்மன்களின் மோசமான ஆட்டத்தால் பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது....


Next Story

மேலும் செய்திகள்