சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்!
பதிவு : செப்டம்பர் 24, 2020, 08:51 AM
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காணலாம்...

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி தனது 2வது ஆட்டத்தில் , ராஜஸ்தான் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

வரும் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் வாட்சன் , முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் மிடில் வரிசை வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது. மும்பை அணிக்கு எதிரான மோதலில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் , பவர் பிளேயில் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வாட்சன், விஜய்... 33 மற்றும் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்..
இதன் காரணமாக இளம் வீரரான சாம் கரணை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்பு இருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி நிகிடி , இறுதி ஓவரில் 30 ரன்கள் உட்பட 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார் , ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை அறிந்த போதிலும் , நிகிடி யார்கர்கள் வீசாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. 

இதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாஷ் ஹேஸில்வுட் களமிறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. 6 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி , அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடியது தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.. வரும் ஆட்டங்களில் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணியை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு மிக கடினமாகி விடும்....

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

200 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

2 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1093 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

8 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் டொமினிக் திம் வெற்றி இளம் வீரரிடம் தோற்று வாவ்ரிங்கா வெளியேற்றம்

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள டொமினிக் திம் உக்ரைனை சேர்ந்த சாக்கோவை எதிர் கொண்டார்.

25 views

ஐபிஎல் தொடர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி - 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

11 views

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.