கொரோனா பேரிடரில் உதவியர்களுக்கு கவுரவம் : பெயர்களை மாற்றிக் கொண்ட கோலி , டிவில்லியர்ஸ்

கொரோனா பேரிடர் காலத்தில், ஏழை மக்களுக்கு உதவிய நபர்களை பாராட்டும் விதமாக , பெங்களூரு கேப்டன் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் , அவர்களின் பெயர் பொறித்த ஜெர்சியுடன் விளையாடுகின்றனர்.
கொரோனா பேரிடரில் உதவியர்களுக்கு கவுரவம் : பெயர்களை மாற்றிக் கொண்ட கோலி , டிவில்லியர்ஸ்
x
கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பெயரை சிம்ரன்ஜித் சிங் என மாற்றியுள்ளார். அதற்கான காரணம் மாற்றுத்திறனாளியான சிம்ரன்ஜித் சிங் , கொரோனா காலத்தில் சுமார் 98 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி பலருக்கு உணவு அளித்துள்ளார். டி வில்லியர்ஸ் , டிவிட்டர் பக்கத்தில் பரிடோஷ் பந்த் என மாற்றியுள்ளார். பரிடோஷ் பந்த் கொரோனா காலத்தில் தினமும் 2 வேலை ஏழை மக்களுக்கு உணவு அளித்து இருக்கிறார். இவர்களை பாராட்டி தொடர் முழுவதும் சிம்ரன்ஜித் சிங் . பரிடோஷ் பந்த் பெயர் பொறித்த ஜெர்சியை கோலி , டி வில்லியர்ஸ் அணிந்து விளையாடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்