கள நடுவர் நிதின்மேனனை சாடிய சேவாக்

பஞ்சாப் டெல்லி அணிகளுக்கு இடையேயான மோதலில் கள நடுவராக செயல்பட்ட நிதின் மேனனை, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
கள நடுவர் நிதின்மேனனை சாடிய சேவாக்
x
பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது , 18வது ஓவரின்  3வது பந்தில் அகர்வால்  எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். ஆனால் எதிர்த்திசையில் நின்ற ஜோர்டன் முதல் ரன்னை சரியாக நிறைவு செய்யவில்லை எனக் கூறி  ஒரு ரன் மட்டுமே வழங்கப்பட்டது. ரீப்ளேயில் பார்க்கும்போது ஜோர்டன்  முதல் ரன்னை  நிறைவு செய்தார் என்பது உறுதியானது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக் ஆட்டநாயகன் விருது நிச்சயமாக நிதின் மேனனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என  விமர்சித்துள்ளார்.  ரசிகர்கள் அந்த ஒரு ரன்  வழங்கப்பட்டிருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்று இருக்குமா என கேள்வி எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்