அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி- ரஷ்ய இணை பட்டம் வென்றது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், ஜெர்மனி-ரஷ்யா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி- ரஷ்ய இணை பட்டம் வென்றது
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், ஜெர்மனி-ரஷ்யா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஜெர்மனியின் லாரா சீஜ்மன்ட் (Laura Siegemund) , ரஷ்யாவின் வேரா வொனரெவா (Vera Zvonareva) இணை, அமெரிக்காவின் நிகோல் மெலீசார் Nicole Melichar , சீனாவின் யூஃபேன் சூ Yifan Xu  இணையை எதிர்கொண்டது. சுமார் 80 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில், சீஜ்மன்ட், வொனரெவா இணை வெற்றி பெற்று, யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி சென்றது. கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை, ஜெர்மனி வீராங்கனை சீஜ்மன்ட் முதல்முறையும், ரஷ்ய வீராங்கனை வொனரெவா மூன்றாவது முறையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்