மெ. ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பு - 4வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெ. ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பு - 4வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா வில்லியம்ஸ்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று போட்டியில், இளம் வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸை, செரீனா எதிர்கொண்டார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனாவை, முதல் சுற்றில் யாரும் எதிர்பாராத வகையில், 6க்கு 2 என்ற கணக்கில் ஸ்டீபன்ஸ் தோற்கடித்தார். எனினும் பின்னர் சுதாரித்து கொண்ட செரீனா, தனது வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த இரண்டு செட்களை, 6க்கு2, 6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றி செரீனா, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்