கொரோனா பாதிப்பில் சிஎஸ்கே - அடுத்து என்ன?

துபாய் மண்ணில் ஐ.பி.எல் போட்டியை எதிர்கொண்டிருக்கும் சிஎஸ்கே அணிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது கொரோனா... சி.எஸ்.கே அணியின் அடுத்த நகர்வு என்ன...?
கொரோனா பாதிப்பில் சிஎஸ்கே - அடுத்து என்ன?
x
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி துபாய் சென்றடைந்த‌து சி.எஸ்.கே அணி... வழக்கம்போல விமான நிலையத்தில் வீர‌ர்கள் மற்றும் அணியினருக்கு, பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 1,2,3 மற்றும் 6 வது நாட்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 28 ஆம் தேதி அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து சிஎஸ்கே அணியினரின் தனிமைப்படுத்தும் காலம், செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட வீர‌ர்களை 14 நாட்கள் தனிமைபடுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், பயிற்சிக்கு அனுமதி இல்லை என்பதால் மேலும் சில நாட்கள் வீர‌ர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பரிசோதனை மேற்கொண்ட அனைவரும் ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தனிமைபடுத்திய பின்னர் அணியினருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த‌தும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனியும், ரெய்னாவும் சென்னையில் அறிவித்து ஏமாற்றத்தை அதிர்ச்சியாக மாற்றியிருந்தனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இந்த ஐபிஎல் போட்டி மீதான எதிர்பார்ப்பு உணர்ச்சிவசமாக மாறி இருந்த‌து. இந்த நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த பேரிடியாக இந்த கொரோனா தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க முட்டுக்கட்டைகளை முறியடித்து முத்திரை பதிக்க காத்திருக்கிறது சிஎஸ்கே அணி.

Next Story

மேலும் செய்திகள்