பார்சிலோனாவில் இருந்து விலக மெஸ்சி முடிவு - மெஸ்சியின் முடிவால் பார்சிலோனா ரசிகர்கள் அதிர்ச்சி

நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி , பார்சிலோனா கிளப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
பார்சிலோனாவில் இருந்து விலக மெஸ்சி முடிவு - மெஸ்சியின் முடிவால் பார்சிலோனா ரசிகர்கள் அதிர்ச்சி
x
அண்மையில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் , பார்சிலோனா அணி - பேயர்ன் முனிச் அணியிடம் 8க்கு 2 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்து வெளியேறியது, இதனையடுத்து அணிக்குள் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என பார்சிலோனா நிர்வாகம் முடிவெடுத்தது. இந்நிலையில் மெஸ்சி இந்த வார இறுதியில் நடக்கும் மருத்துவ பரிசோதனையில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் , கிளப்பில் இருந்து விலக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்சிலோனா நிர்வாகம் விரைவில் முடிவை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 731 போட்டிகளில் விளையாடி 634 கோல்கள் அடித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப்பில் மெஸ்சி இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்