பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து அணி வெற்றி
x
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மாஸ்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இங்கிலாந்து 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு 277 ரன் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  இதையடுத்து, இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியது.

Next Story

மேலும் செய்திகள்