இன்று 39வது பிறந்தநாள் கொண்டாடும் தோனி - தோனியின் ஓய்வு குறித்து பரவும் வதந்திகள்

எந்தவொரு கேப்டனும் நிகழ்த்த முடியாத சாதனையை செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
இன்று 39வது பிறந்தநாள் கொண்டாடும் தோனி - தோனியின் ஓய்வு குறித்து பரவும் வதந்திகள்
x
எந்தவொரு கேப்டனும் நிகழ்த்த முடியாத சாதனையை செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றிய தொகுப்பை காணலாம்...

1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்த மகேந்திர சிங் தோனி சிறு வயதில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு விக்கெட் கீப்பர் தேவை என பயிற்சியாளர் வற்புறுத்தியதன் காரணமாக தோனியின் கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது..உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவருக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிட்டவில்லை.. குடும்ப சூழ்நிலை காரணமாக ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்..அப்போதும் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடாமல் , கடுமையாக பயிற்சி செய்து போட்டிகளில் கலக்கிய தோனிக்கு 2004 ஆம் ஆண்டு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் கிரிக்கெட் பயணத்தில் தோனிக்கு ஏறுமுகம் தான்..2007ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூத்த வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் , அதே ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் தோனி  தலைமையில் இந்தியா களமிறங்கி மகுடம் சூடியது..பின்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் இந்தியாவுக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். 2010ல் தோனி தலைமையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸை கைப்பற்றியது.

2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையை பெற்று தந்து 28 ஆண்டுகால இந்திய ரசிகர்களின் காத்திருப்பை தகர்த்தார் தோனி....2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூடி , அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்... தோனி 2019ஆம் ஆண்டு 50 உலக கோப்பை தொடருக்கு பிறகு தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் , 2020 ஐபிஎல் தொடரில் விளையாட முனைப்பு காட்டினார், கிரிக்கெட் களம் கண்டு ஏறக்குறைய ஓர் ஆண்டு நிறைவடைய  உள்ள நிலையில் , தோனி இதுவரை ஓய்வு முடிவை அறிவிக்காதது , அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என்பதையே உறுதிப்படுத்துகிறது.


Next Story

மேலும் செய்திகள்