ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் - பல்பீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் - பல்பீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்
x
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96. பஞ்சாப் மாநிலம் மொஹலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1948, 1952, 1956 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்பீர் சிங்கின் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்