கொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.
கொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார். கொரோனாவால் இத்தாலியை அடுத்து ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 40 ஆயிரம் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, மருத்துவ செலவுக்காக 8 கோடியே 25 லட்சம் ரூபாயை  ஸ்பெயினுக்கு வழங்கியுள்ளார். இதே போன்று மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலாவும் 8 கோடி ரூபாய் நிதியை ஸ்பெயினுக்கு வழங்கியுள்ளார். இதே போன்று பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ இத்தாலியில் இரண்டு அவசர சிகிச்சை வார்டுகளை ஏற்படுத்தி தந்துள்ளார். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகளை  ரொனால்டோ வழங்கியுள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்