களமிறங்குவாரா சுப்மன் கில் ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
களமிறங்குவாரா சுப்மன் கில் ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டியில் இரு இன்னிங்சிலும் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 16 ரன்னிலும், 2வது இன்னிங்சில் 14 ரன்னிலும் வெளியேறினார். இதனால் 2வது டெஸ்டில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்