இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - வலுவான நிலையில் நியூசிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - வலுவான நிலையில் நியூசிலாந்து அணி
x
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. வெலிங்டனில் நடைபெற்றும் வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 216 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நியூசிலாந்து வீரர்கள் கிராண்டிஹோம் 43 ரன்களும், ஜெமிசன் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் பெளல்ட் 38 ரன்கள் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்தது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 183 ரன்கள் அதிகமாகும். முதல் இன்னிங்சில் இந்திய வீரர்  இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்