இந்தியா Vs நியூசி முதல் டெஸ்ட் - இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் , நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா Vs நியூசி முதல் டெஸ்ட் - இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட்
x
வெலிங்டனில் நடைபெறும் இந்த போட்டியில், 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. நியூசிலாந்து வீரர்களின் வேகத்தில் திணறிய இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 46 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சவுதி, ஜேமிசன் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் நிதானமாக ஆடினர். கேன் வில்லியம்சன் 89 ரன்னிலும், 100வது டெஸ்டில் விளையாடிய ராஸ் டெய்லர் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர் இஷாந்த சர்மா சிறப்பாக பந்து வீசிய 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 71 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்