மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : ஆஸி. அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல்

மகளிருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது.
மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : ஆஸி. அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல்
x
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 49 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் சுழற்பந்துவீச்சில் சிக்கி, ஆஸ்திரேலிய அணி சின்னாப்பின்னமானது. இதனால் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகி விருதை வென்றார். 


Next Story

மேலும் செய்திகள்