பெண்கள் டி-20 உலக கோப்பை : சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா?

பெண்கள் டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெண்கள் டி-20 உலக கோப்பை : சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா?
x
7வது பெண்கள் டி-20 உலக கோப்பை தொடர் வருகிற 21ம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா , ஒரு முறை சாம்பினான இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா , இந்தியா , ஸ்ரீலங்கா , நியூசிலாந்து , வங்கதேச அணிகளும் , குரூப் பி பிரிவில் இங்கிலாந்து , தென்னாப்பிரிக்கா , தாய்லாந்து , பாகிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். ஹர்மன்பீரித் கவுர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி , முதல் முறையாக பட்டம் வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சை விட பேட்டிங் சிறப்பாக உள்ளது. மந்தனா , ஷபாலி வர்மா , ஜெமியா ரோட்ரிக்ஸ் , ஹர்மன்பீரித் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி முதல்முறையாக டி-20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் இந்திய ஆண்கள் சோபிக்க தவறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில் , இந்த தொடர் சோகத்திற்கு பெண்கள் அணி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்