சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வி
x
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் , முதல் கட்ட ஆட்டத்தில் லிவர்பூல் கிளப் அணியும், அட்லெடிகோ மாட்ரிட் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அட்லெடிகோ வீரர் சவுல் கோல் அடித்து அசத்தினார். இறுதி வரை போராடிய லிவர்பூல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் அட்லெடிகோ அணி 1க்கு 0 பூஜ்ஜியம் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 73 சதவீதம் பந்தை வசம் வைத்திருந்த லிவர்பூல் அணியால் கோல் அடிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்