பெண்கள் டி -20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பெண்கள் டி -20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி
x
ஆஸ்திரேலியாவில், வரும் 21ஆம் தேதி பெண்கள் டி -20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதனையொட்டி  பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது. 108 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் திணறியது. பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசினர். இறுதி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்திய வீராங்கனை பூனம் யாதவ் 8 ரன்கள் மட்டுமே வழங்கி அணியை வெற்றி பெறச் செய்தார்.

 

Next Story

மேலும் செய்திகள்