இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை வீழ்த்தியது மான்செஸ்டர் யூனைடட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் , மான்செஸ்டர் யூனைடட் அணி 10வது வெற்றியை பதிவு செய்தது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை வீழ்த்தியது மான்செஸ்டர் யூனைடட்
x
FULHAM நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்ஸி - மான்செஸ்டர் யூனைடட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் மான்செஸ்டர் யூனைடட்  வீரர் மார்ஷியல் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் யூனைடட் அணி 66வது நிமிடத்தில் கோல் அடித்தது. இறுதிவரை போராடிய செல்ஸி அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் யூனைடட் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் செல்ஸி அணியை வீழத்தியது. உள்ளூரில் தோற்றதால் செல்ஸி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்