2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு - தொடக்க போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதல்

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டணையை, ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு - தொடக்க போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதல்
x
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டணையை, ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி தொட​ங்கி மே 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதனையொட்டி 56 லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் மார்ச் 29ஆம் தேதி நடக்கும் தொடக்க போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்