இந்தியா - ஆஸி. போட்டியை வைத்து சூதாட்டம் : ரூ.5 கோடி அளவில் பணம் விளையாடியது அம்பலம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை குறி வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்தியா - ஆஸி. போட்டியை வைத்து சூதாட்டம் : ரூ.5 கோடி அளவில் பணம் விளையாடியது  அம்பலம்
x
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் ஞாயிறன்று நடந்தது. இதனை குறிவைத்து, சூதாட்ட கும்பல் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற, சிறப்பு குற்றப்புலனாய்வு போலீசார் சூதாட்ட கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து 7 லேப்-டாப், 74 செல்போன், 2 எல்.இ.டி. டி.வி.,11 டைரி  பறிமுதல் செய்யப்பட்டன.  சூதாட்டத்திற்காக இந்த கும்பல் பிரத்யேகமாகவே சாஃப்ட்வேரையும், 2 மொபைல் ஆப்களையும் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். சுமார் 5 கோடி ரூபாயை வைத்து சூதாட்டம் நடைபெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலின் தலைவன் அமித் ஆரோராவை போலீசார் கைது செய்துள்ளனர். கைதாகியுள்ள அமித், கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் சூதாட்டத்தை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அமீத்துடன், கிரிக்கெட் வீரர்கள் யாராவது தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்