சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டான மேத்யூ வேட்

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் டி-20 தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் மேத்யூ வேட் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தது, கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டான மேத்யூ வேட்
x
கப்பா மைதானத்தில் பரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் 15-வது ஓவரில் மேத்யூ வேட் பந்தை எல்லைக்கோட்டை நோக்கி அடித்தார். அதனை எல்லைக்கோட்டை தாண்டி சென்று பிடித்த எதிரணி வீரர் மேட் ரென்ஷா காலை தரையில் ஊன்றும் முன்னர் பந்தை மைதானத்திற்குள் வீச முயன்றார். அது தோல்வியடைந்த நிலையில், அவர் பந்தை தூக்கி போட்டு விட்டு பின்னர் மீண்டும் குதித்து பந்தை எல்லைக்கோட்டிற்குள் தள்ளினார். அருகிலிருந்த பேண்டன் பந்தை பிடிக்கவே, மேத்யூ வேடுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கிரிக்கெட்டில் இதபோன்று அவுட் கொடுக்க விதி உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு டிவிட்டரில்  பதில் அளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த நிகழ்ச்சி கிரிக்கெட்டின் விதிகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே எம்.சி.சியின் புதிய விதிகளின் படி, இதனை அவுட்டாகவே கருத வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்