வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி
x
கட்டாக்கில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரான் 89 ரன்களும்  பொல்லார்ட் 74 ரன்களும் விளாசினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ராகுல் - ரோகித் இணை முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. அதன் பின் ஒரு பக்கம்  கேப்டன் கோலி போராட மறுமுனையில் விக்கெட்கள் சரிந்ததால் பரபரப்பு நிலவியது. கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஜடேஜா, தாக்கூர் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 8 பந்துகளை மீதும் வைத்து 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்