ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவா அணி மூன்றாவது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கோவா அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவா அணி மூன்றாவது வெற்றி
x
ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா - ஹைதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தில் முழு திறனை வெளிப்படுத்திய கோவா வீரர்கள் 63 சதவீதம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இரண்டாம் பாதியில் 68வது நிமிடத்தில் கோவா வீரர் மன்வீர் சிங் அடித்த கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக கோவா 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. 


Next Story

மேலும் செய்திகள்