மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி
x
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மர் 56 ரன்களும், லீவிஸ் 40 ரன்களும் எடுத்தனர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ராகுல் 62 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கோலி 50 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இதனால் இந்திய அணி 18.4 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்தப் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தால், அனைத்து வித கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால் போதிய இலக்கு இல்லாததால், அவர் சதத்தை 6 ரன்களில் தவறவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்