டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : கனடா அரை இறுதிக்கு தகுதி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கனடா, அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : கனடா அரை இறுதிக்கு தகுதி
x
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கனடா, அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய வீரர் JOHN MILLMAN - னுடன் கனடா வீரர் VASEK POSPISIL மோதினார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் கனடா வீரர் VASEK POSPISIL வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில், ஆஸ்திரேலியாவின் ALEX DE MINAUR - ரும், கனடா வீரர் DENIS SHAPOVALOV- வும் மோதினர். இந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ALEX DE MINAUR வெற்றி பெற்று, அசத்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் JORDON THOMPSON - JOHN PEERS ஜோடி, கனடாவின் VASEK POSPSIL - DENIS SHAPOVALOV ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், கனடா ஜோடி, 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் அரை இறுதி சுற்றை, கனடா உறுதி செய்தது. 



Next Story

மேலும் செய்திகள்