"பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா"

சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா
x
சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்- ரைபிள் பிரிவில், தமிழக வீராங்கனை இளவேனில்  வாலறிவன், தங்கம் வென்றார்.
பதக்கப்பட்டியலில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது சீனாவின் புடியான் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள், முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.  இந்தியாவின் இளம் வீராங்கனை 17 வயது மனு பாக்கர், 10 மீட்டர் ஏர்- பிஸ்டல் பிரிவில், 244 புள்ளி 7 பாயின்டுகளுடன் தங்கம் வென்று, அசத்தினார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். அடுத்த ஆண்டு, டோக்கியோவில் நடைபெறும் ஓலிம்பிக் போட்டிக்கு, இதன்மூலம் மனு பாக்கர் தகுதி பெற்றுள்ளார். தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்,10 மீட்டர் ஏர் - ரைபிள் பிரிவில், 250 புள்ளி 8  பாயின்ட்டுகளுடன்  தங்கம் வென்றார்,  சீனியர் பிரிவில், இளவேனிலுக்கு கிடைத்த 2 - வது தங்கம் இதுவாகும். 20 வயதான இளவேனில் வாலறிவன்,
இதற்கு முன்பு, கடந்த ஆகஸ்டு மாதம் பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும்
தங்கம் வென்றிருந்தார். ஆடவர் 10 மீட்டர் ஏர் - ரைபிள் பிரிவில், இந்தியாவின் 17 வயது இளம் வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங், தங்கப்பதக்கம் 
வென்று, அசத்தினார். இதன் மூலம், மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் , பதக்கப்பட்டியலில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்