வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : 150 ரன்களில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : 150 ரன்களில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா
x
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தூரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில், டாஸில் வென்ற வங்கதேசம், முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. இதன் படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் 6 வீர‌ர்கள்,  ஒற்றை இலக்க‌ங்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழ‌ந்த‌து. இந்திய அணியின் மொகமத் ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்திய அணி , முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்