டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?
பதிவு : செப்டம்பர் 22, 2019, 12:36 PM
வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி ஐ.பி.எல்.லோ அதுபோல தான், இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு டி.என்.பி.எல் உருவெடுத்துள்ளது. ஐபிஎல்-லில் ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்களை சேர்க்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியும். 
ஆனால் டி.என்.பி.எல். தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க பி.சி.சிஐ. தொடர்ந்து மறுத்து வருகிறது. அதாவது ஐபிஎல்லுக்கு அளிக்கப்படும் உரிமைகள் டிஎன்பிலுக்கு வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல, வெளிமாநில வீரர்களையும் டிஎன்பிஎல்லில் விளையாட அனுமதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. கர்நாடக பிரிமீயர் லீக் மற்றும் டி20 மும்பை லீக் போட்டிகளுக்கும் இதேபோல் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட பிசிசிஐ மேலானதா என்று நிபுணர்களும், டி.என்.பி.எல். பங்குதாரர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஒரு வீரரை, எந்த அடிப்படையில் விளையாட தடுக்கிறார்கள் என்றும் இங்கே கேள்வி எழுகிறது.
இந்நிலையில் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த குடிமகன், மற்றொரு பகுதியில் வேலையில் சேர முடியாது என்று அர்த்தமா? என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல முடியும், யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எல். போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க, பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக இருப்பதாக டிஎன்பிஎல்லின் நிர்வாக குழு தலைவர் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார். அடுத்த டிஎன்பிஎல் தொடர் தொடங்கும் முன் இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஒவ்வொரு அணிக்கும் 4 வெளிமாநில வீரர்கள் என்று அனுமதித்தால், 32 வீரர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமையும் என்றும், இந்த எளிய விஷயத்தை எடுத்து சொல்லியும் பிசிசிஐ நிர்வாகிகள் புரிந்து கொள்ளவில்லை என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணை செயாளர் பழனி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11506 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

106 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

67 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

49 views

பிற செய்திகள்

வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்பநாய் சிமி

தமிழக வனத்துறைக்கு முதன் முறையாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மோப்பநாய் சிமி மற்றும் அதன் பயிற்சியாளருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

15 views

நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, சுற்றுச்சூழல் அமைச்சர் கே சி கருப்பணன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

125 views

"இடைத்தேர்தல் தொகுதிகளில் 22,847 லிட்டர் மதுபானம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார்.

16 views

ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறப்பு

பாசனத்திற்காக பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நாளை ஆணையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.