வெளிமாநில வீரர்களுக்கு தடை -டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு

வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த தொடரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிமாநில வீரர்களுக்கு தடை -டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு
x
உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் போல இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு டிஎன்பிஎல் உருவெடுத்துள்ளது. ஐபிஎல்-லில் ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்களை சேர்க்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியும். ஆனால் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது. அதாவது ஐபிஎல்லுக்கு அளிக்கப்படும் உரிமைகள் டிஎன்பில்லுக்கு மறுக்கப்படுகிறது.வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல வெளிமாநில வீரர்களையும் டிஎன்பிஎல்லில் விளையாட அனுமதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. கர்நாடக பிரிமீயர் லீக் மற்றும் டி20 மும்பை லீக் போட்டிகளுக்கும் இதேபோல் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிமாநில வீரர்களை சேர்ப்பதன் மூலம் டி.என்.பி.எல். போட்டிகளின் தரம் மேலும் உயரும் என டி.என்.பி.எல். போட்டி தொடரின் நிர்வாகிகள் கருதுகின்றனர். வெளிமாநிலங்களை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரர்களை சேர்க்க கோரி தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் டிஎன்பில் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்