மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய வீரர் பும்ரா ஹாட்ரிக் சாதனை
பதிவு : செப்டம்பர் 01, 2019, 02:37 AM
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
கிங்ஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் விஹாரி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.  அவருக்கு உறுதுணையாக நின்ற இஷாந்த் சர்மா அரைசதம் விளாசினார். இதனையடுத்து, களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள், பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக 8வது ஓவரில் பும்ரா தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். 

பிற செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது.

40 views

இங்கிலாந்தில் நடக்கும் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

25 views

லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

26 views

இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

1221 views

டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?

வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

194 views

வெளிமாநில வீரர்களுக்கு தடை -டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு

வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த தொடரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

434 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.