இன்று தேசிய விளையாட்டு தினம் - உலக அரங்கில் ஒளிர்ந்த இந்திய நட்சத்திரங்கள்

தேசிய விளையாட்டு தினமான இன்று உலக அரங்கில் முத்திரை பதித்த விளையாட்டு சாதனையாளர்கள் குறித்து பார்க்கலாம்
இன்று தேசிய விளையாட்டு தினம் - உலக அரங்கில் ஒளிர்ந்த இந்திய நட்சத்திரங்கள்
x
சச்சின் டெண்டுல்கர்... கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டருக்கு அறிமுகம் எதுவும் தேவையிருக்காது...  கிரிக்கெட்டை தெரிந்த நாடுகளுக்கு ச‌ச்சின் என்றால் கிரிக்கெட் என்றும்... கிரிக்கெட் போட்டியே தெரியாத நாடுகளுக்கு, கிரிக்கெட் என்றாலே ச‌ச்சின் தான் என்றும் பரீட்சையமானவர்... கடலை சுருக்கி குவளைக்குள் அடக்குவதை போன்றது சச்சினின் சாதனைகளை வார்த்தைகளில் சொல்வது.

தயான் சந்த்... இந்திய ஹாக்கி ரசிகர்களால் "ஹாக்கியின் மந்திரவாதி" என இன்றளவும் கொண்டாடப்படும் மாபெரும் ஆளுமை... ஒலிம்பிக்கில் தங்கம் என்பது இன்று எட்டாக்கனி... ஆனால் தயான்சந்த் தலைமை தாங்கிய இந்திய ஹாக்கி அணி, தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த‌து.

மில்கா சிங்... காமன்வெல்த், மற்றும் ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்காக பல பதங்கங்களை வென்று குவித்த தடகள வீரரான, இவர் பறக்கும் சீக்கியர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்....

கர்ணம் மல்லேஸ்வரி... 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இவர், அன்று முதல் இந்திய பெண்கள் மென்மையானவர்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்தார். 
அர்ஜுனா , ராஜீவ் காந்தி கேல் ரத்னா , பத்ம ஸ்ரீ என இவர் வாரிக்குவித்த விருதுகள் இவரை ஆந்திராவின் இரும்பு பெண்மணியாக மாற்றி காட்டியது.

மேரி கோம்.... வறுமை, திருமணம், குழந்தை இவை எல்லாவற்றையும் கடந்து குத்துசண்டை களத்திற்குள் நுழைந்த இவர், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில்  ஆறு முறை தங்கம், ஆசிய போட்டிகளில் ஐந்து முறை தங்கம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் என பதக்க வேட்டை நடத்தியதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

சாக்‌ஷி மாலிக்... மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு மகுடம் சூட்டியவர் சாக்‌ஷி மாலிக்... 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தந்த வீராங்கனை. காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் என பங்கேற்ற போட்டிகள் அனைத்திலும் பதக்கங்களை குவித்தவர் சாக்‌ஷி.

சானிய மிர்சா... இன்றும் இந்திய ரசிகர்கள் பலருக்கும் டென்னிஸ் என்றாலே சானியா மிர்சா தான் ஞாபகம் வருவார்... கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் போன்ற பிரிவுகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று சாதனை படைத்த இவருக்கு, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

சாய்னா நேஹ்வால் இந்திய பேட்மிண்டனின் தங்க மகளாக கொண்டாடப்படுபவர் சாய்னா. இந்தியாவில் பேட்மிண்டனை பிரபலமாக்கியதில் இவரின் பங்கு மகத்தானது.  உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.. ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பதக்க கனவவை நனவாக்கியவர் சாய்னா...

பி.வி.சிந்து.... இந்தியாவின் தற்போதைய தங்க தாரகை பி.வி.சிந்து... உலக சாம்பியன்ஷிப்  பேட்மிண்டனில் இந்தியாவு​க்கு முதன்முறையாக தங்கம் பெற்று கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார், பி.வி.சிந்து.

Next Story

மேலும் செய்திகள்